இந்திய இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தியாக தீபம் திலீபன் அவர்களது உண்ணா விரதப்போராட்டம் நல்லூரிலே 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி 5 அம்சக்கோரிக்கைகளுடன் உண்ணாநிலைப்போராட்டம், 12 நாட்கள் ஒரு துளி நீர்கூட அருந்தாது தனது உடலை கொஞ்சம் கொஞ்சமாக உருக்கி தன்னுடைய உயிரை அற்பணித்தார்.
அக்காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கிழ் இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தமிழர்கள் வடக்கு கிழக்கு பூராகவும், துன்புற்றிருந்த வேளையிலும், இனத்திற்காக அவர் உயிர் நீத்துள்ளார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தமிழர்களுடைய அபிலாசை என்பது 13வது திருத்தத்திற்குள்ளே முடக்கப்பட்டு, ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட்டுள்ள வேளையிலே அதற்கு எதிராக தமிழ் மக்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படல் வேண்டும், தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும்.
கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படல் வேண்டும், சிங்கள பௌத்த மயமாக்கல் அகற்றப்படல் வேண்டும், தமிழர் தாயகத்திலிருந்து காவல்துறையினர் வெளியேற வேண்டும், போன்ற அடிப்படிக் கோரிக்கைகளை முன் வைத்து அவருடைய உண்ணாநோம்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இன்னும் அவருடைய கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தியாகதீபம் திலீபனின் கனவை வெல்ல அனைவரும் அற்பணிக்கவேண்டும் மிகம் சவால் நிறைந்த இக்காலகட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்படும் ஊர்திப்பயணப்போராட்டமானது இந்த நிலையில் தியாகதீபம் திலீபனின் கனவை வெல்ல அனைவரும் அற்பணிக்கவேண்டும் மிகம் சவால் நிறைந்த இக்காலகட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்படும் ஊர்திப்பயணப்போராட்டமானது 3ம் நாளாக திருகோணமலையில் உணர்வெழுச்சியோடு பயணித்துக்கொண்டிருக்கின்றது மக்கள் தியாகதீபத்திற்கு தமது வணக்கத்தினை செலுத்திவருகின்றனர்.மக்கள் தியாகதீபத்திற்கு தமது வணக்கத்தினை செலுத்திவருகின்றனர்.
அந்தவகையில் சனிக்கிழமை ( 17/09/2022 ) மூன்றாம் நாள் திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் மாவடிச்சேனை கிராமத்திலிருந்து ஆரம்பமாகியது