னடாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டாம் என முக்கிய மருத்துவர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறினால் போதும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மருத்துவ தேவைகளுக்காக வெளியே செல்லுங்கள் எனக் கூறும் அவர், உணவு பண்டங்கள் வாங்க வாரத்தில் ஒருமுறை மட்டுமே செல்லுங்கள் என்றார்.
தற்போதைய சூழலில் 12 வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என தெரிவித்த அவர்,
ஆனால் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பொதுமக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே அதற்கான பலனை அடைய முடியும் என்றார்.