30 மாணவர்களுக்கு கல்வித்தடை விதித்த அன்னைத்தலைமை நிர்வாகம்!

You are currently viewing 30 மாணவர்களுக்கு   கல்வித்தடை விதித்த அன்னைத்தலைமை நிர்வாகம்!

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்  எதிர்கால எமது சந்ததிகளின் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் உருவாக்கப்பட்டு தொடர்ந்து தமிழ்க்கல்வியை ஆசிரியர்களின் அற்பணிப்பாலும்  மாறி மாறி வரும் நிர்வாக உறுப்பினர்களின் நேர்மையாலும் மிகச்சிறப்பாகச் செயற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

பாடசாலையின் நிர்வாகச்செயற்பாடுகளுக்குள் ஒருபோதும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு   தலையீடுகளை செய்தது கிடையாது. ஆனால்  புதிய நிர்வாகத் தெரிவுகள் வருகின்றபோது ஆலோசனைகளையும்  ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை வழங்கி வந்திருக்கின்றது.

இதற்கு பாடசாலை நிர்வாகத்தினரும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கும் கட்டமைப்புகளின் பலப்படுத்தலுக்கும் பாரிய பணிகளை செய்து வந்திருக்கின்றனர்.

இதன் காரணமகாவே பாடசாலை பல கிளைகளைப்பரப்பி அதிகமான அடுத்த சந்ததிகளை உள்வாங்கி கல்வியை சீராகக் கற்பித்து வந்திருந்ததமை அனைவரும் அறிந்ததே

ஆனால் 2010 ஆம் ஆண்டு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளராக இருந்த ஒருவரை( இன்றை குழப்பநிலையின் பிரதானி) அன்னைத்தலைமையின் இணைப்பாளராக அதிகாரத்தில் இருத்திய காலத்தில் இருந்து மெல்ல  மெல்ல முரண்பாடுகளை உருவாக்கி  பாடசாலை நிர்வாகங்களில் பணியாற்றியோரை பழி சுமத்தி வெளியேற்றும் படலங்களை உருவாக்கினார்.

இதற்கு முக்கிய காரணம் தனது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு அவர்கள் முட்டுக்கட்டையாக இருந்து வந்தனர் என்பதே

இந்தப்போக்கு தொடர்ந்த வண்ணமே இருந்ததால் இனத்திற்காக ஆத்மாத்தமாக பணியாற்றிய பணியாளர்கள்  ஏறக்கறையை 30 பேருக்கு மேல் வெளியேற்றப்பட்டு அந்த இடங்களுக்கு தனது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு தலையாட்டும் பொம்மைகளையும்  பதவி, புகழ்ச்சி என்ற பலவீனமானவர்களையும் வெற்றிடங்களுக்கு நிரப்பி பாடசாலையின் அனைத்து தொடர்பாடல்களையும் வங்கிக்கணக்குகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் முறறுமுழுதாக கொண்டுவந்தார்.

இதனால் தாய் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை பலவீனப்படுத்தி தானே நோர்வே சமூகத்தின் பிரதான காவலன் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி  தமிழ்த்தேசி கட்டமைப்புகளின் தேசிய ஒற்றுமைப்பயணத்தில் பிளவுகளை உருவாக்கும் சூத்திரதாரியாகவும் புடம்போட்டுக்காட்டியது அவரது சமூகவிரோதச் செயற்பாடுகள்.

இந்த அவல நிலையை சீர்செய்யலாம் என்ற ஆதங்கத்துடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் 8 வருடங்களுக்கு மேலாக இப்பிரச்சனையை வெளிக்கொண்டுவராது உள்ளுர பேசி ஒரு சுமூகமான ஒற்றுமையை உருவாக்கலாம் என்ற நப்பாசையுடன் பல சந்திப்புகளை உருவாக்கியவேளையிலும் எல்லாவற்றையும் அதிகாரத்தோரணையுடன் நிராகரித்து அடங்காபிடாரியாக நின்ற சம்பவங்கள் நிறையவே உண்டு.

இவரின் வக்கிர வெளிப்பாடுகளும்  அதிகார அத்துமீறல்களும் எல்லை கடந்து போகவே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  அறிக்கை ஒன்றை மக்களுக்கு விடவேண்டிய கடப்பாடு உருவாகியது என்பதனை அவர்களே மக்களுக்கான சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.

இதன் பிற்பாடு திரைமறைவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை பலவீனப்படுத்த முன்னெடுத்த விடயங்கள், குறித்த நபரால் அநாமதேய குழுமங்களாலும் அன்னை குழுமங்களிலும் வெளிப்படையாக முன்னெடுத்து வருவது நீங்கள் அறிந்த விடயம்.

இந்த அநாமதேய குழுமங்களில் தமித்தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான சக்திகளை வைத்து சகதிகளையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் எழுதிவருவதும் நீங்கள் அறிந்ததே, அந்த வரிசையில் இப்போது பெற்றோர்களை குறிப்பாக அநியாயத்தை தட்டிக்கேட்கும் பெற்றோர்களை குறிவைத்து அதியுச்ச சமூக விரோதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எந்த நோக்கத்துக்கா பாடசாலை உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திலிருந்து வழுவி தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் பெற்றோர்களை அச்சுறுத்துவதற்காகவும் 30 இற்கு மேற்பட்ட மாணவர்களின் கல்வி கற்றலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு செய்த அதே அடக்குமுறையை தவறுகளை தட்டிக்கேட்ட பெற்றோர்களுக்கு பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இது அதிகார அத்து மீறலின் அதி உச்சமாகவே பார்க்கப்படுகின்றது தமிழ் இனத்தின் எதிர்கால சந்ததிகள் தமிழ்க்கல்வியை கற்றுக்கொள்ள முடியாத அபாயச் சூழலை உருவாக்கியுள்ளது

நிர்வாகத்தின் தவறுகளை தட்டிகேட்ப்பவர்களுக்கு இதுதான் தண்டனை என்றால் இவர்களின் மண்டையில் எவ்வளவு சமூக விரோத விசம் பாய்ந்திருக்கின்றது என்பதை தமிழ் மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இதையும் தாண்டி இன்னும் வக்கிரமான செயற்பாடுகளுக்கும் இந்த நிர்வாகத் தலைமை மக்களை கொண்டு சென்றுள்ளது.

அதாவது பெற்றோர்கூட்டத்தில் கேள்வி கேட்ட பெற்றோர் வன்முறையாளர் என குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கும்(barnevern) முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இழிநிலைப்போக்கு நாளை உங்களையும் வந்தடையாமல் தடுக்கவேண்டுமானால் மக்களாகிய நீங்கள் விழிப்படைய வேண்டும் என்பதைத்தான் இன்றைய காலம் கட்டியம் கூறி நிற்கின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply