நடுக்கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை ஜப்பானின் கப்பலொன்றே மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் பயணித்துக்கொண்டிருந்த மீன்பிடிப்படகு சேதமடைந்து ஸ்பிராட்லி தீவுகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது என விஎன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
மியன்மார் கொடியுடன் பயணித்துக்கொண்டிருக்கும் லேடிஆர்3 படகு ஆபத்தில் சிக்கியுள்ளது இந்த படகு 303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முயல்கின்றது என தகவல் கிடைத்ததாக வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கப்பல் தென்கரையோரத்தில் உள்ள வுங் டாவுவில் இருந்து 258 கடல்மைல் தொலைவில் காணப்பட்டது .
படகின் இயந்திர அறைக்குள் நீர் சென்றதால் அந்த கப்பல் தத்தளிக்க தொடங்கியது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டுள்ளது.
வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் கப்பலை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது,அந்த பகுதியில் உள்ள ஏனைய கப்பல்களிற்கு அவசர சமிக்ஞையை அனுப்பியுள்ளது.
திங்கட்கிழமை அந்த பகுதியில் ஜப்பான் கொடியுடன் ஹெலியோஸ் லீடர் என்ற கப்பல் காணப்பட்டுள்ளது,படகில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை காப்பாற்றுமாறு அந்த கப்பலிற்கு உத்தரவு வழங்கப்பட்டது.
ஜப்பான் கப்பல் உடனடியாக தத்தளித்துக்கொண்டிருந்த படகைநோக்கி சென்றுள்ளது படகில் இருந்தவர்கள் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டுள்ளனர்.
ஜப்பான் கப்பல் படகில் இருந்தவர்களை மீட்டு அவர்களிற்கு மருத்துவகிசிச்சைகளை வழங்கியுள்ளது.
வியட்நாம் மேலும் ஐந்து கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 20 சிறுவர்கள் 19 பெண்கள் உட்பட 303 பேரும் இன்றும் வுங் டாவுவை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)
.jpg)