33 ஆண்டுகள் சிறைவாசத்தை தகர்த்து தாயகம் திரும்பும் மூன்று தமிழர்கள் – காணொளி

You are currently viewing 33 ஆண்டுகள் சிறைவாசத்தை தகர்த்து தாயகம் திரும்பும் மூன்று தமிழர்கள் – காணொளி

செய்யாத குற்றத்திற்காக 33 ஆண்டுகள் சிறைவாசத்தை தகர்த்து தாயகம்  திரும்பும்   ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் மூவரும் இன்று   தமிழீழம் புறப்பட்டனர்.  கொழும்பை சென்றடையும் மூவரையும் அவர்களது உறவினர்கள் வரவேற்க காத்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய தமிழ்நாட்டு தமிழர்களும் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் என இலங்கைத் தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அதேநேரத்தில் ஈழத் தமிழர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர்  திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 4 பேரையும் உடனே  அவர்கள் சொந்த மண்ணில் உறவினர்களுடன் இணைய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றன. இவ்வழக்கு விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தன்  சொந்த மண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை  அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனடிப்படையில் இன்று (3.4.2024 )  ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர்   தாயகம் நோக்கி புறப்பட்டனர்.    இவர்களை தமிழீழ  ஆதரவாளர்கள்   சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி  வைத்தனர்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply