13ம் திருத்தச்சட்டத்தினை முழுமையாக நிறைவேற்றி ஒற்றையாட்சிக்குள் தமிழர் விடுதலையை சரணாகதியாக்கி எதிர்காலத்தினல் சுயாட்சியற்ற முடமான இனமாக அடிமைப்பட்டுக்கிடக்க அடிவருடி அரசியல்வாதிகள் அண்டைநாட்டின் நிகழ்சிநிரலை நிறைவேற்றுவதற்காக படாதபாடு படும் நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டும் தனியொரு கட்சியாக நின்று எதிர்த்து மக்கள் மத்தியில் விளிப்புணர்வுப்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
யாழ்பாணத்தில் தீலீபன் நினைவுத்தடத்தில் தொடங்கி கிட்டு பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு முதற்போராட்டம் பேரேழுச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் 13ம் திகதி வவுனியாவில் மக்கள் எழுச்சிப்போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கான மக்கள் விளிப்புணர்வு சந்திப்புகளை தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கிராமம் கிராமமாக முன்னெடுத்துவருகின்றனர் இப்போராட்டத்தில் அகவைபேதமின்றி அணிதிரள்வது தமிழ்களின் வரலாற்றுக்கடமை என்பது குறிப்பிடத்தக்கது.