கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம், இன்று 19/02/2022 Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை வந்தடைந்தது. வரும் வழியில் கடும் புயற்காற்றின் சீற்றத்திலும் இயற்கையின் பெரும் சவால்களுக்கு மத்தியில் பயணித்து 70Km தொலைவினைக்கடந்து இலக்கு நோக்கி அயராது பயணிக்கின்றது.


ஐக்கிய நாடுகள் அவையின் 49வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் ,அங்கத்துவ நாடுகள் சிறிலங்காப்பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்த வேண்டும் மற்றும் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு… எனும் கோரிக்கைகளை ஆணித்தனமாக முன்வைத்தபடியே தமிழீழ விடுதலையினை வென்றெடுக்க 24 தடவையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தொடர்ந்துநாளை 20/02/2022 பெல்சிய நாட்டின் எல்லையினை மதியம் 13.00 மணிக்கு சென்றடையும் எனவே பெல்சியம் வாழ் தமிழ் மக்களே !நீங்கள் பேரணியாக ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் இணைந்திட அழைக்கின்றோம்.

இடம் : Bredabaan 31/1,
2990 Wuustwezel
Belgium .
“ நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது “
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.