4 பேரை காப்பாற்ற 210 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல்!

You are currently viewing 4 பேரை காப்பாற்ற 210 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல்!

நான்கு பணயக்கைதிகளை மீட்கும் பொருட்டு 210 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றதாக ஹமாஸ் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேல் முன்னெடுத்த கொடூர தாக்குதலில் பணயக்கைதிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மத்திய காஸாவில் உள்ள நுசிராத் நகரில் பிணைக் கைதிகளாக இருந்த 4 பேரை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலைத் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட நிலையில், இவர்கள் தற்போது இஸ்ரேல் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது மீட்கப்பட்ட நால்வரும் இருவேறு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் நால்வரும் மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பணயக்கைதிகள் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில், கடுமையான வான்வழி தாக்குதலும், தரைவழியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இஸ்ரேல் முன்னெடுத்த இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை தற்போது 210 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 400 கடந்துள்ளது. முதலில் 93 பேர்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் சடலங்கள் Al-Aqsa மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. மத்திய காஸாவில் செயல்படும் ஒரே ஒரு மருத்துவமனை இதுவாகும்.

அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,600 கடந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments