ஈரானுடன் கச்சா எண்ணெய் தொடர்பாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இந்தியாவைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உள்ளது.
அணு ஆயுதங்களை தயாரிக்க மும்முரம் காட்டி வரும் ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்து உள்ளது. அந்நாட்டுடன் மற்ற நாடுகளும் வர்த்தகத்தில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஈரானுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக 30 தனிநபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உள்ளது. அதில் நான்கு இந்திய நிறுவனங்களும் அடக்கம்.
ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக இந்திய நிறுவனங்கள் தடையை சந்திப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் சில நிறுவனங்கள் இவ்வாறு தடையை சந்தித்து உள்ளன.