14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட  வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்!!

You are currently viewing 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட  வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்!!
24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி மாவீரர்களின் 23 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட  வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாக்குதலின் பின்னணி.
2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.
2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.
2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.
2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.
2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.
தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.
விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.
ஈழநாதத்தின் வெளியீடு ( 2001 நாளிதழ் )
 முற்றிலுமாக அழிக்கப்பட்டவை
இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை
இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு – A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்
தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில் சில மறைமுகக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர்.
எம் மக்கள் மீது குண்டு வீசிய குண்டுப் பறவைகள் அவற்றின் இருப்பிடம் தேடிச்சென்று தீயில் கருக்கி தாய்மண்ணின் விடியலுக்காய் உறங்கும் தேசப்புயல்கள்.
தேசப்புயல்களுக்கு எம் சீரம் தாழ்ந்த வீரவணக்கம்.
14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட  வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்!! 1
கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கியபோதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்ககளாக என்றும் அழியாப் புகழ்பெற்று வாழும்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply