வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்றைய தினம் (30.03.2023) இடம்பெறும் இந்த மக்கள் போராட்டமானது , வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடைந்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமய பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்புக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.