46வது மனிதநேய கூட்டத்தொடரை முன்நிறுத்தி ஆரம்பமாகியது ஈருருளிப்பயணம்!!

You are currently viewing 46வது மனிதநேய கூட்டத்தொடரை முன்நிறுத்தி ஆரம்பமாகியது ஈருருளிப்பயணம்!!
46வது மனிதநேய கூட்டத்தொடரை முன்நிறுத்தி ஆரம்பமாகியது ஈருருளிப்பயணம்!! 1
46வது மனிதநேய கூட்டத்தொடரை முன்நிறுத்தி ஆரம்பமாகியது ஈருருளிப்பயணம்!! 2

எதிர் வரும் 46வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழ் இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி மனித நேய செயற்பாட்டாளர்கள் 04.01.2020 திங்கட்கிழமை அன்று Strasbourg மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஆலோசனை அவை முன் இருந்து தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணத்தினை ஆரம்பித்தார்கள்.

46வது மனிதநேய கூட்டத்தொடரை முன்நிறுத்தி ஆரம்பமாகியது ஈருருளிப்பயணம்!! 3
46வது மனிதநேய கூட்டத்தொடரை முன்நிறுத்தி ஆரம்பமாகியது ஈருருளிப்பயணம்!! 4

பயணத்தின் இலக்காக ஐரோப்பிய ஒன்றியத்தினையும் பிரான்சு அரசாங்கத்தினையும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தக்கோரி பல அரசியற் சந்திப்புக்களிலும் ஈடுபட்டார்கள். குறிப்பாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மனு கையளிக்கப்பட்டு , ஐரோப்பிய அலோசனை அவையின் வெளிவிவகார அதிகாரிகள் தற்போதைய Covid-19 நோய் தொற்று காரணமாக அவையின் நுழைவாயிலில் வந்து மனித நேய செயற்பாட்டாளர்களை சந்தித்து தமிழர்களின் நியாமான கோரிக்கையினை ஏற்றுக்கொண்டதோடு கோரிக்கை அடங்கிய மனுவினையும் பெற்றுக்கொண்டார்கள்.

46வது மனிதநேய கூட்டத்தொடரை முன்நிறுத்தி ஆரம்பமாகியது ஈருருளிப்பயணம்!! 5
46வது மனிதநேய கூட்டத்தொடரை முன்நிறுத்தி ஆரம்பமாகியது ஈருருளிப்பயணம்!! 6

கடும் குளிரிலும் மாவீரர்கள் சுமந்த கனவுகளை நெஞ்சிலே நிறுத்தி கொண்டு தமிழீழ மக்களின் வலிகளை தங்கள் கால்களில் சுமந்து விடுதலைச் செய்திக்காக அயராது பயணித்து மேலும் Strasbourg , Saverne, Sarrebourg, Héming மாநகரசபையில் மனுக்களை கையளித்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இனவழிப்பின் பெரும் துயர் சுமந்து அயராது அறவழிகளில் பல போராட்டங்களை தொடரும் எம் மக்களின் அற்பணிப்பு வீண் போய்விடாது எனவும் வரலாற்றின் தொடர்ச்சியில் மக்கள் எழுச்சி பெரும் ஆயுதத்தின் பலம் என்பதனையும், மனித நேயத்தின் இருப்பில் தமிழர்களின் நேர்மையான போராட்டத்தினை அர்த்தமுள்ளதாக்க தாமும் குரல் கொடுப்போம் எனவும் நம்பிக்கை வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன, DNA எனும் பத்திரிகை ஊடகச் சந்திப்பும் மேற்கொள்ளப்பட்டது. காவல் துறையின் பாதுகாப்போடு இன்றைய பயணம் 100Km தொலைவு கடந்து Héming மாநகரசபையில் நிறைவு பெற்றுக்கொண்டது.

மீண்டும் நாளை மாவீரரின் ஆசியுடனும் இயற்கையின் துணையோடும் மனித நேய ஈருருளிப்பயணம் Paris நாடாளுமன்றத்தினை நோக்கி தொடரும்.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

பகிர்ந்துகொள்ள