தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு, என்றும் அழியாத நினைவுகளோடு வணக்கம் செலுத்துகின்ற பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள்
இன்று,செப்டெம்பர் திங்கள் 26 ஆம் நாள், தமிழர் தாயகம் தியாக தீபத்தின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது. யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும்
தேசப் புதல்வனுக்கு தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர். பிரித்தானியாவின் தலைநகரிலும் அரசியல்
விழிப்புணர்வுப் போராட்டம் காலை 11 மணியளவில் ஆரம்பமாகி நடை பெற்று வருகின்றது. தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தியாக தீபத்திற்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைய இருக்கும்
இவ்வணக்க நிகழ்வில் தமிழ் மக்கள் வந்து, மலர் தூவி வணக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 4 மணிக்கு எழுச்சி உரைகளும் உறுதியேற்பும் இடம் பெற இருக்கின்றன. அனைவரும் வாருங்கள்.
– தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா





