
06.09.2022 அகவணக்கத்தோடு ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் 480KM தொலைவு கடந்து பெல்சியம் நாட்டினில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இன்றைய அறவழிப்போராட்டத்தின் போது பல்லின வாழ் மக்களோடு உரையாடி எமது இலக்கினை வழி நெடுகிலும் எடுத்துரைக்கப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை அவசியத்தினையும் எமது பூர்வ நிலமான தமிழீழத்தின் விடுதலை… போன்ற இலக்குகளை பறைசாற்றிய படி இன்று எழுச்சிமிக பயணம் தொடர்ந்தது. மேலும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்ட செயற்பட்டார்கள் அடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கான அழைப்புக்களையும் காணொளிவாயிலாக விடுத்திருந்தனர். விபரம் கீழ் வருமாறு
- 12.09.2022 திங்கட் கிழமை அன்று France,Strasbourg ல் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் முன் காலை 9 மணி தொடக்கம் பி.ப 4 மணி வரை கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியற் சந்திப்புக்களை மேற்கொண்டு இறுதியாக
- 19.09.2022 திங்கட் கிழமை Switzerland, Geneva ல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப் பேரொளி முருகதாசன் திடல்)
“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா.
“காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது இலட்சியம் மாறப்போவதில்லை”
- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.