கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட ஆதாரக் காட்சிப்படுதலும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களினால் கிழமை நாட்களில் மாநகரசபை முன்பாகவும் புதன்கிழமைகளில் பாராளுமன்றத்திற்கு முன்பாக தொடர்ந்து நடாத்தப்படுகிறது .
பேரினவாத இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். என்று வலிறுத்தி இன்றைய தினம் பிரான்சு புறநகர் பகுதியான திறம்பிளே ஒன் பிரான்சு (Tremblay-en-France) மானகரசபை முன்றலிலும் நீதி கோரி இனப்படுகொலைக்கான ஆதார நிழல்பட கள் பார்வைக்கு வைக்கப்பட்டதுஇதன்போது நகரசபை உறுப்பினர்கள் மற்றும் நகரசபையின் முதல்வர் அவர்களுடன் சந்திப்பு இடம் பெற்று கோரிக்கையடங்கிய மனுவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





