இலங்கையில் ஆண்கள் 15 பேர் மற்றும் பெண்கள் 08 பேர் என மேலும் 23 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே-05 முதல் மே-11 வரையான காலப்பகுதியில் குறித்த 23 பேரும் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே – 05 ஆம் திகதி – ஒருவர்
மே – 06 ஆம் திகதி – ஒருவர்
மே – 07 ஆம் திகதி – 03 பேர்
மே – 08 ஆம் திகதி – 02 பேர்
மே – 09 ஆம் திகதி – 04 பேர்
மே – 10 ஆம் திகதி – 03 பேர்
மே – 11 ஆம் திகதி – 09 பேர்
இவ்வாறு, ஆண்கள் 15 பேர் மற்றும் பெண்கள் 08 பேர் என மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 827 இல் இருந்து 850 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த ஆண்களில், 46 மற்றும் 49 வயதுடை 50 வயதிற்கு குறைவான இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.