500 க்கும் மேற்பட்டடோர் பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்ய அல்லது தாமதப்படுத்த பொது சுகாதார நிறுவனம் (FHI) பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் 100 க்கு மேற்பட்டடோர் பங்கேற்கும் அனைத்து பொது நிகழ்வுகளும், செயல்படுத்துவதற்கு முன் ஆபத்து மதிப்பீடு செய்யப்படல் அவசியம் என்றும் FHI இனால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
ஆபத்து மதிப்பீட்டை நடத்துவது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு என்றும், பின்னர் அது நகராட்சியால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கொரோனா வைரஸின் தொற்றை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் FHI குறிப்பிட்டுள்ளது.
ஆதாரம்/ மேலதிக தகவல்:- Dagbladet