50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்!

You are currently viewing 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்!

இன்றைய தினமும் (புதன்கிழமை) 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply