அமெரிக்கா சென்றுள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான திருமிகு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.
அந்தவகையில்
U s காங்கிரஸ் உறுப்பினர்கள் :
Congressman Wiley Nickel
Congresswoman Deborah Ross
Congressman Jamie Raskin
Congressman Danny K. Davis ஆகியோருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சந்திப்பை மேற்கொண்டு தமிழர்களின் இன்றைய நிலைசார்ந்தும் அரசியல் தீர்வு சார்ந்தும் விளக்கியுள்ளார்.
இவர்கள் நால்வரும் தமிழர் விவகாரங்களில் அதிக அக்கறை செலுத்தியவர்கள் அமெரிக்கா காங்கிரஸ் பாராளுமன்றத்தில் தமிழர்தேசம் தொடர்பாக 427 தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



