இலங்கையின் ஆட்சியானது, காலனித்துவ ஆட்சியால், 1948 மாசி 4ஆம் திகதி சிங்கள ஆதிக்க அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டதில் இருந்து தமிழர்கள் மாறி மாறி ஆளும் சிங்கள ஆதிக்க சக்தியின் கீழ் அடிமையாக்கப்பட்டுள்ளார்கள்.
இதன்படி, இலங்கையில் தமிழர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டார்கள், தமிழர்களின் நிலங்கள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுகின்றன.
மேலும், தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டதுடன், அவர்களை தேடி நீதி கோரும் அவர்களது உறவுகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமல்ல தமிழ் அரசியல் தலைவர்களும், நீதிபதிகளும் கூட அச்சுறுத்தப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர்.
இதற்கமைய உள்நாட்டில் நீதி மறுக்கப்பட்டது. எமது உறவுகளை தேடும் உரிமை, வாழும் உரிமை, பேசும் உரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை, நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் ஊடாகவும் இராணுவம், மகாவலி குடியேற்ற திட்டம் வன வள திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் என்பவற்றால் பறிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அடிமையாக வாழும் தமிழ் மக்களாகிய நாம், இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக அடையாளப்படுத்தி வருகினறோம்.
ஆகவே அன்பான தமிழீழ உறவுகளே உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழருக்கு கரிநாள் என்பதை அடையாளப்படுத்தி அடையாளப்போராட்டங்களில் பங்கெடுப்போம்.