5G அலைக்கற்றையால் விமான நிலையங்களில் தொழிநுட்பக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள் கருத்துகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையங்களுக்கருகில் 5G அலைக்கற்றை பாவனையை கட்டுப்படுத்துமுகமாக நடவடிக்கைளை மேற்கொள்வது அவசியமென, அமெரிக்க விமான சேவைகளின் நிர்வாகங்கள் அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. விமானநிலையங்களின் ஓடுபாதைகளிலிருந்து ஆகக்குறைந்தது 3 கிலோமீட்டர்கள் சுற்றுவட்டத்துக்குள் 5G அலைக்கற்றை தொழிற்படா வண்ணம் ஆவன செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G பாவனையை பிற்போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.