6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்!

You are currently viewing 6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்!

ஜரோப்பிய நாடுகளிடம் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு மனிதநேயசெயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படும் ஈருருளிப்பயணப்போராட்டம் 6ஆம் நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 1
21 ஆவது தடவையாக தொடரும் இவ் அறவழிப்போராட்டத்தின் மூலம் எம் தமிழீழ மக்களின் இன்னல்களை புலம்பெயர் அரசியல் சமூகத்திடம் மனிதனேய செயற்பாட்டாளர்கள் தம் பயணத்தின் போது முன்வைத்தனர் ,


முக்கிய குறிப்பாக 40 மாநகரசபைகளிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும்என்பதனையும் தமிழர்களுக்கு தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தினார்கள்.


அத்தோடு எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பெளத்த சிங்களப் பேரினவாதசிறிலங்கா அரசிற்கு கால நீடிப்பு மேலும் வழங்கக்கூடாது மாறாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீனவிசாரணையினை முன்னெடுக்க வேண்டும் என்பதனை பிரான்சின் வெளிவிவகாரத்துறை அமைச்சு, பிரான்சுஅரசதலைவருக்கும் மாநகரசபை ஊடாக வலியுறுத்துவதாக உறுதிமொழிகளை முதல்வர்கள் தந்திருந்தார்கள் . அத்துடன் பிரஞ்சு ஊடகங்களும் இவ்வறவழிப்போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 2
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 3
தமிழர்களின் நியாயமான போராட்டங்களினை சிறிலங்கா அரசு தவறாக மொழிபெயர்த்துக் கொண்டிருக்கையில்மாநகரசபை முதல்வர்கள் தங்கள் சமூக வலைதள ஊடகங்களில் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் என்பதனை, மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களுடன் தான் கலந்துரையாடினார் என்பதனையும் பகிர்ந்துஆதரவுகளை பகிர்ந்து மேலும் எமது போராட்டங்களினை ஊக்குவித்தார்கள்.




தற்காலச் சூழலில் தாயகத்தில் தமிழினவழிப்பின் சான்றுகளை அழிப்பதன் மூலம் எம் மக்களின் வடுக்களை மறைத்துஅனைத்துலக சுயாதீன விசாரணையில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என பெளத்த சிங்களப் பேரினவாத அரசுஎண்ணிக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில் யாழ்பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தமிழின அழிப்புநினைவுத்தூபியினை அழித்த சிறிலங்கா பேரினவாத அரசிற்கு எதிராக எம் மக்கள் வெகுண்டெழுந்து வெகுசனபோராட்டங்களில் ஈடுபட வேண்டும். அவ்வாறே தமிழின அழிப்புகுற்றவாளிகளை அனைத்துலக குற்றவியல்நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தமிழர்களுக்கான நீதியினையும் விடுதலையும் பெற ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 4
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 5
எத்தனை முறை எம் தமிழின அழிப்பின் சான்றுகளை சிங்களப் பேரினவாதம் அழித்தாலும் புலம் பெயர் தேசத்திலேஎம் உறவுகள் பலர் தமிழினவழிப்பின் தூபிகளை நிறுவி வாழிட நாடுகளிற்கு மேலும் உரக்க தமிழினவழிப்புச்செய்தியினை கூறிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது திண்ணம். அந்தவகையிலே தமிழீழத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கான துயர் துடைப்பு பணியில் ஈடுபட்ட வேளை கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத்தூபி, லெப் கேணல்தியாக தீபம் திலீபன் அண்ணா, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுத்தூபிகள் இருக்கும் மாநிலங்களினைநோக்கி விரைந்த மனித நேய ஈருருளிப்பயணம் தமிழீழ விடுதலையின் முதல் வித்தான லெப் சங்கர் அண்ணாவின்நினைவுத்தூபியில் தமிழீழவிடுதலை போராட்டத்தினை மேலும் வலுப்படுத்தி எம் மக்களுக்கான நீதியினைதேசியத்தலைவர் வழிகாட்டலில் பெறுவோம் என உறுதி கூறியதோடு நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டு இப்போராட்டத்துக்கு பாராட்டு தெரிவித்ததோடு எமது நியாயமான கோரிக்கை சார்ந்து பிரெஞ்சு அரசுக்குதெரிவிப்பதாக உறுதிதந்து நிறைவுபெற்றது.
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 6
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 7
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 8
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 9
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 10
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 11

அத்தோடு எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பிக்க இருக்க சொற்பநாட்களே உள்ள நிலையில் நாட்களை எண்ணி மேலும் பல அறவழிப்போராட்டங்களினை மேற்கொண்டு புலம் பெயர்நாடுகளை எம் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வைக்க வேண்டும் என்பதனை தமிழீழக்குடிமக்களாகிய எம் உறவுகளிடம் உரிமையோடு கோருகின்றோம்.

பகிர்ந்துகொள்ள