6 கட்சிகளின் தலைவர்கள் முன்நாள் முதலமைச்சர் வீட்டில் சந்திப்பு!

You are currently viewing 6 கட்சிகளின் தலைவர்கள் முன்நாள் முதலமைச்சர் வீட்டில் சந்திப்பு!

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேச்சு நடத்தியுள்ளனர். நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பில் ஈடுபட்டனர்

குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின்செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு, தேர்தல்,ஜெனீவா போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

6 கட்சிகளின் தலைவர்கள் முன்நாள் முதலமைச்சர் வீட்டில் சந்திப்பு! 1
6 கட்சிகளின் தலைவர்கள் முன்நாள் முதலமைச்சர் வீட்டில் சந்திப்பு! 2
6 கட்சிகளின் தலைவர்கள் முன்நாள் முதலமைச்சர் வீட்டில் சந்திப்பு! 3

இவர்கள் எல்லோருமே இந்தியாவின் பூகோள அரசியலுக்கு அடிவருடி அரசியல் நடத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments