பயிற்சிப்பாடசாலை(aks) மற்றும் குழந்தைகள் தோட்டத்தில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா தொற்றியதை அடுத்து 61 சிறுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது Vevelstadåsen பாடசாலையில் 36 சிறுவர்களும் 5 பணியாளர்களும் Vestråt குழந்தைகள் தோட்டத்தில் 25 குழந்தைகளும் 8 பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில் இப்படி நடந்தது கவலையளிப்பதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நோர்வேயில் 9 நகராட்சிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.