08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு , பெல்சியம் மாநகரசபையில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து 520Km தொலைவு கடந்து பசுத்தொன் மாநகரசபை முதல்வராகவும் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் அங்கம் வகிப்பவருமான மதிப்பிற்குரிய புனுவா லுட்சன் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை தான் சார்ந்த ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் , மாநகரசபையிலும் வலியுறுத்துவதாக உறுதிமொழி தந்தார். அத்தோடு ஊடகச் செய்தியாகவும் தமிழர்களின் அறவழிப்போராட்டத்தினை வெளிக்கொணர முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

இன்றைய மனித நேய ஈருருளிப்பயணத்தில் பெல்சியம் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் திரு நாதன் அண்ணை அவர்களும் இணைந்து கொண்டு தன் வரலாற்றுக் கடமையினை ஆற்றினார்.

எமது விடுதலைப் பயணம் இலக்கு நோக்கி மேலும் வீறு கொண்டு நகரும்.
“சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது”
- தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்