80 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!

You are currently viewing 80 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் அழகாபுரி பகுதியில் 80 லிட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் கசிப்பினை பொதிசெய்து மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லும்போது இராமநாதபுரம் பொலீசார் மறித்து சோதனையிட்டபொழுது மறைத்து எடுத்துச்செல்லப்பட்ட 35 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் 45 லீற்றர் காசிப்பினை விற்பனைக்கு தயார் நிலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டஇருவரும் தருமபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply