«AstraZeneca» எனப்படும் கொரோனா தடுப்பு மருந்தினால் இரத்த உறைவு ஏற்படுவதாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, நோர்வேயில் இத்தடுப்புமருந்து ஏற்றப்பட்ட 30 வயதேயான பெண்ணொருவர், மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் மரணமாகியுள்ளதையும், மேலும் இருவருக்கு அசாதாரண இரத்த உறைவு ஏற்பட்டதையும் அடுத்து, நோர்வேயில் இம்மருந்தின் பாவனை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், வேறும் ஐரோப்பியநாடுகளும் இம்மருந்தினால் இரத்த உறைவு ஏற்படுவதாக தெரிவித்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன .
செய்தி மேம்பாடு:
17:45
இதேவேளை, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி, சுவீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இம்மருந்தின் பாவனையை நிறுத்திவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஐரோப்பிய மருந்தக நிறுவனம், குறித்த மருந்தின் நேரடியான பின்விளைவாக இரத்த உறைவு இருக்கக்கூடியதற்கான நிரூபணமான காரணங்களேதும் இதுவரை இல்லை என கருத்துரைத்திருக்கிறது.