“George Floyd” இறந்ததை அடுத்து “Black Lives Matters” இயக்கத்திற்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாக்ஹோமில் (Stockholm) உள்ள செர்கல் சதுக்கத்தில் (Sergels torg) 1,000 பேர் வரை கூடியுள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட செய்தி:-
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிசார் மிளகு தெளிப்பானைப் (pepper spray) பயன்படுத்தியுள்ளதாக Aftonbladet பத்திரிகை நிருபர் தெரிவித்துள்ளார். செய்தித்தாளுக்கு கிடைத்த தகவல்களின்படி, காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் போத்தல்களையும் வீசியுள்ளனர்.
மேலும், வன்முறைத்தாக்குதலில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Expressen நாளிதழ் எழுதியுள்ளது .
கொரோனா வைரஸ் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட, 50 க்கும் மேற்பட்டவர்கள் கூடுவதட்கான தடையை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறுவதால் ஆர்ப்பாட்டத்தை உடைக்க காவல்துறையினர் இப்போது பணியாற்றி வருகின்றனர். ஆரம்பத்தில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருந்தது என SVT தெரிவிக்கின்றது.
அமைப்பாளருடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம், அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்கள் என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் Mats Eriksson கூறியுள்ளார்.
மேலதிக தகவல் : VG