வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் இருப்பதாகவும், இறந்து விட்டதாவும் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அந்த நாட்டு அரச ஊடகம் அறிவித்தது.

அவர் நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டது.

தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு நாடாவை வெட்டி திறந்து வைத்ததாக அரச ஊடகம் தெரிவித்தது.

இதன் மூலம் கடந்த மூன்று வாரங்களாக கிம் பற்றி வெளியான வதந்திகளிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


