ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான சர்ச்சைக்குரிய “Brexit” திட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பு, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“Therese May” அம்மையார், பிரித்தானிய பிரதமராக இருந்தபோது அவர் கொண்டுவந்திருந்த “Brexit” திட்டம், நாளளுமன்றத்தில் மூன்று தடவைகள் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதிய பிரதமர் “Boris Johnson” கொண்டுவந்திருந்த இத்திட்டம், நாடாளுமன்றத்தில் பெரு வெற்றி பெற்றுள்ளது. வாக்கெடுப்பின்போது 358 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 234 உறுப்பினர்கள் எதிராவும் வாக்களித்திருந்தனர். பிரதமரே எதிர்பார்த்திராத வகையில் பலஉறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன்படி, 2020 ஆம் ஆண்டு, தை மாதம் 31 ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினாலும், ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்படும்வரையிலும், பிரித்தானியா தொடர்ந்தும் இப்போதுள்ள ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தங்களை கடைப்பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.