ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த கொலையாளிகள் இன்னும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று(06.04.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மதனராஜன், நெப்போலியன், சேதுபதி மற்றும் கருணாகரமூர்த்தி ஆகிய நான்கு பெரும் நீதிமன்றத்திற்கும் சமூகமளித்தனர். மதனராஜன் மற்றும் நெப்போலியன் ஆகியோர் நாட்டை விட்டும் தப்பியோடினர்.
நீதிபதி இளஞ்செழியன் இவர்களுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கியும் இவர்கள் பிடிபடவில்லை.
அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு யாழ். நீதிமன்றம் தப்பியோடியவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அதன் பின்னர் 3 ஜனாதிபதிகள் மாறியும் இன்னும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.