அமெரிக்காவின் F-16 ரக போர் விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சியை உக்ரைனிய வீரர்கள் நான்கு மாதங்களில் நிறைவு செய்து இருப்பதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் Oleksii Reznikov தெரிவித்துள்ளார். ரஷ்யா முன்னெடுத்த போர் தாக்குதலில் கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு பிறகு உக்ரைன் நேரடியான எதிர்ப்பு தாக்குதலை முழுவீச்சில் செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது போரின் ஆரம்ப கட்டங்களில் ரஷ்ய படைகளின் கட்டுபாட்டிற்கு சென்ற தெற்கு உக்ரைனிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைனிய ஆயுதப்படை வேகமாக முன்னேறி வருகிறது.
அந்த வகையில் இதுவரை 7 கிராமங்களை உக்ரைனிய ஆயுதப்படை வீரர்கள் ரஷ்ய படைகளிடம் இருந்து விடுவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் F-16 ரக போர் விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சியை உக்ரைனிய ஆயுதப்படை வீரர்கள் 4 மாதங்களில் நிறைவு செய்து இருப்பதாக வெள்ளிக்கிழமை அன்று உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் Oleksii Reznikov தெரிவித்துள்ளார்.
பொதுவாக இந்த பயிற்சியை நிறைவு செய்ய 6 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், உக்ரைனிய வீரர்கள் நான்கே மாதத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இதைப்போல பிரான்ஸின் சீசர் அமைப்புகளை பயிற்சி செய்ய மூன்று மாதங்கள் தேவைப்படும் என்ற நிலையில் உக்ரேனிய வீரர்கள் மூன்று வாரங்களில் பயிற்சியை நிறைவு செய்து உள்ளனர். வான் பாதுகாப்பு பேட்ரியாட் அமைப்புகளை பயிற்சி பெற 10 மாதங்கள் இருக்கும் நிலையில் 10 வாரங்களில் உக்ரைனிய வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர் என அமைச்சர் Oleksii Reznikov உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் முதல் F-16 ரக போர் விமானங்களை 2024ம் ஆண்டு உக்ரைனின் வான் பரப்பில் பார்க்க முடியும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆனால் இன்றைய நாளுக்கு முன்னதாக F-16 ரக போர் விமானங்களின் திறன் மோதலில் இருப்பதை ரஷ்ய ஜனாதிபதி புடின் நிராகரித்தார்.