FHI: அவசர சிகிச்சை பெறுவோரில் நால்வரில் மூவர் ஆண்கள்!

  • Post author:
You are currently viewing FHI: அவசர சிகிச்சை பெறுவோரில் நால்வரில் மூவர் ஆண்கள்!

தேசிய பொது சுகாதார நிறுவனத்தின் வாராந்த அறிக்கையின்படி, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முன்பிருந்தே ஆபத்து நிலையில் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இவர்களுக்கு இதய நோய் மிகவும் பொதுவானதாகவுள்ளது என்றும், அதைத் தொடர்ந்து நீரிழிவு நோய், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் போன்றவையும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவர்களில், நான்கு பேரில் மூவர் (73 விழுக்காடு) ஆண்கள் என்றும், அனுமதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 59 என்றும் கூறப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் 50-75 வயதுக்குட்பட்டவர்கள், இருப்பினும் 25-49 வயதுக்குட்பட்டவர்களும் தீவிர சிகிச்சையைப் பெறுகின்றார்கள். .

இதுவரை, 0-25 வயதுக்கு உட்பட்ட தீவிர சிகிச்சை நோயாளிகள் யாரும் பதிவு செய்யப்படவில்லை.

மேலதிக விபரம் : VG

பகிர்ந்துகொள்ள