நோர்வேயில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 239 லிருந்து 242 ஆக உயர்ந்துள்ளதாக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை உயிரிழந்த 242 பேரின் சராசரி வயது 82 என்றும், அவர்களில் 55 விழுக்காடு ஆண்கள் என்றும் பொது சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
VG யின் கணக்கெடுப்பின்படி:
- இப்பொழுது, நோர்வே மருத்துவமனைகளில் கொரோனா தோற்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் 19 ஆக இருந்துள்ளது. இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது 4 பேர் குறைவாகும்.
- அதேபோல், தீவிர சிகிட்ச்சைப் பிரிவில் இருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 4 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் 2 ஆக இருந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது, இருவர் கூடுதலாகும்.
- மேலும் சுவாசக்கருவி பயன்பாட்டில் இருப்பவர் எண்ணிக்கை தற்போது 2 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினமும் 2 ஆகவே இருந்துள்ளது. ஆகவே மாற்றம் எதுவுமில்லை.
- இன்று இதுவரை, 3 புதிய இறப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை நோர்வேயில் மொத்தம் 242 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர்.
- மேலும், இன்று இதுவரை 6 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8600 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய (11.06) புள்ளிவிபரங்களின்படி, நோர்வேயில் இதுவரை 272,905 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.