Frp ஆறு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் மற்றும் 20 நாட்கள் அரசாங்கத்தில் இருந்துள்ளது. இப்போது அது முடிவுக்கு வந்துள்ளது. “இனி இந்த அரசாங்கத்தில் தொடர்வதற்கான எந்த அடிப்படை காரணங்கழும் இல்லை” என்று Siv Jensen இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்
“நான் Frp ஐ அரசாங்கத்திற்கு அழைத்துச் வந்தேன், இப்போது நான் Frp ஐ மீண்டும் வெளியே எடுக்கிறேன்.
நான் இதை செய்கிறேன் ஏனென்றால் இதுவே சரியான செயலாகும்.” என்றார்.
Frp தொடர்ந்தும் Erna Solberg (H) ஐயே பிரதமராக சுட்டிக்காட்டுகின்றது
Jensen செய்தியாளர் கூட்டத்தில் தொடர்ந்து கூறுகையில்”Frp அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும், பிரதமராக Erna Solberg (H) பார்ப்பது இயல்பானது என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில் “நாட்டில் பிரதமரை மாற்ற எங்களுக்கு விருப்பமில்லை. தொடர்ந்து நாட்டை வழிநடத்த சரியான நபர் Solberg என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார் .
பிரதமர் Erna Solberg தனது பத்திரிகையாளர் சந்திப்பில் நாட்டை நிர்வகிக்க Frp மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார், மேலும் “நல்ல அரசியல் தீர்வுகளைக் கண்டறிவதற்காக அரசாங்கத்திலும் Stortinget இலும் Frp செய்த பணிகளுக்கு Frp க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்றார்.
தொழிற்கட்சித் தலைவர் (Arbeiderpartiets leder) Jonas Gahr Støre கூறுகையில்,
“அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான Frp முடிவைத் தொடர்ந்து முதலாளித்துவ தரப்பில் குழப்பம் இப்போது நிறைவடைந்துள்ளது.
Erna Solbergகின் அரசாங்கம் ஒரு வருடத்திற்குப் பிறகு சரிந்துவிட்டது, உள்நாட்டு குழப்பம் முடிந்தது, இது நாட்டிற்கு மோசமான செய்தி” என்றார்.