மொனாக்கோவின் இளவரசர் ஆல்பர்ட் (Albert), வேல்ஸ் இளவரசர் சார்லஸை (Charles) எந்த வகையிலும் பாதித்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மொனாக்கோவின் இளவரசர் ஆல்பர்ட் மற்றும் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இருவரும் கோவிட் -19 க்கு ஆளாகியுள்ளதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் நோய்வாய்ப்படுவதற்கு சற்று முன்பு, லண்டனில் சந்தித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மார்ச் 19 அன்று, முதன்முதலில் மொனாக்கோவின் இளவரசர் ஆல்பர்ட் II (62) பாதிக்கப்பட்டார். அவர் லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தார் மேலும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். தொற்றுச் செய்தி சர்வதேச கவனத்தை ஈர்த்தது, மேலும் அவர் யாரிடமிருந்து வைரஸை பெற்றார், அவர் வேறு எவருக்கு தொற்றைப் பரப்பினார் என்பது ஆரம்பத்தில் ஆராயப்பட்டது .
சில நாட்களுக்கு முன்பு, அவர் லண்டனில் நடந்த ஒரு காலநிலை நிகழ்வில் கலந்து கொண்டார், அங்கு அவர் வேல்ஸின் இளவரசர் சார்லஸ் (71) சந்தித்தார். ஆல்பர்ட் பாதிக்கப்படட சில நாட்களில், இளவரசர் சார்லஸும் பாதிக்கப்பட்டுள்ளதாக Clarence House அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்: Dagbladet