G7 நாடுகள் அவசர ஆலோசனை!

You are currently viewing G7 நாடுகள் அவசர ஆலோசனை!

breaking

 

அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகள் மீதான அடுத்தகட்ட நகர்வு குறித்து விவாதிக்க, ‘ஜி – 7’ நாடுகள் அமைப்பின் மூத்த பிரதிநிதிகள் கனடாவில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்திய டிரம்ப், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். இதற்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்தது.

இதை தொடர்ந்து, வட அமெரிக்க நாடான கனடா மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

 

இதை தொடர்ந்து அமெரிக்க விஸ்கிக்கிக்கு ஐரோப்பிய யூனியன் வரி விதித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், இந்த வரி விதிப்பை ஐரோப்பிய யூனியன் திரும்பப் பெறவில்லை எனில், ஐரோப்பிய ஒயின் மற்றும் இதர மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் என நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், ஜி – 7 அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் மூத்த பிரதிநிதிகள் கனடாவில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஜி – 7 அமைப்பில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடம் பெற்றுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply