இத்தாலிய பிராந்தியமான லோம்பார்டியில் (Lombardia) மட்டும் இப்போது, சீனாவை விட அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.
இன்று ஞாயிறு மட்டும், இத்தாலியில் 651 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ராய்ட்டர்ஸின்(Reuters) எண்ணிக்கையின்படி, கொரோனா தொற்றுநோய் இத்தாலியில் மொத்தம் 5560 உயிர்களை பலிகொண்டுள்ளது.
லோம்பார்டி(Lombardia) இத்தாலியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும் மேலும் இங்கு ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 3456 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இத்தாலியில் நகராட்சிகளுக்கு இடையிலான அனைத்து பயணங்களும் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளன.