NORWEGIAN விமான நிறுவன பங்குகளில் பெரும்பான்மைக்கு உரிமையாளராகும் சீனா!

  • Post author:
You are currently viewing NORWEGIAN விமான நிறுவன பங்குகளில் பெரும்பான்மைக்கு உரிமையாளராகும் சீனா!

BOC Aviation Limited நிறுவனம், நெருக்கடிப் பிரச்சினைக்குப் பின்னர் Norwegian விமான நிறுவனத்தில் 12.67 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் என்றும் இந்த நிறுவனம் சீன அரசுக்கு சொந்தமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

BOC Aviation” என்பது சீன அரசாங்கத்திற்கு சொந்தமான ஏராளமான நிறுவனங்களில் ஓன்று என்று நோர்வே பங்குச் சந்தை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

குத்தகை ஒப்பந்தங்களை, NORWEGIAN விமான நிறுவனம் கிட்டத்தட்ட 390 மில்லியன் பங்குகளாக மாற்றுவதன் மூலம்தான் BOC Aviation, நோர்வே விமான நிறுவனத்தில் 12.67 விழுக்காடு பங்குகளை வாங்குகின்றது. இந்த நிறுவனமோ அல்லது அதன் துணை நிறுவனங்களோ கடந்த காலங்களில் நோர்வேயில் பங்குகளை வைத்திருக்கவில்லை, ஆனால் விமானங்களை குத்தகைக்கு எடுப்பதில் ஒப்பந்தங்களைக் கொண்டிருந்தன.

NOK 3 பில்லியனுக்கான கடன் உத்தரவாதங்களை வழங்குவதற்கான நோர்வே அரசாங்கத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய, பங்கு விழுக்காட்டை போதுமான அளவு உயர்த்துவதற்கான, Norwegian விமான நிறுவனத்தின் முயற்சிகள் தொடர்பாக இந்த பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக Norwegian புதன் காலை அறிவித்துள்ளது .

BOC Aviation என்பது “Sky Splendor Limited” கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனமாகும், இது மீண்டும் “Bank of China Group Investment Limited” கட்டுப்பாட்டில் உள்ளது, இது மீண்டும் “Bank of China Limited” கட்டுப்பாட்டில் உள்ளது, இது மீண்டும் “Central Huijin Investment Ltd” கட்டுப்பாட்டில் உள்ளது, இது மீண்டும் சீன மக்கள் குடியரசிற்கு சொந்தமான முதலீட்டுக் கழகம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நோர்வே பங்குச் சந்தை அறிவிப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. (NTB)

பகிர்ந்துகொள்ள