நேற்று புதன் (03.06) நோர்வே நேரப்படி இரவு ஒளிபரப்பு ஒன்றில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Barack Obama கூறுகையில், George Floyd மரணத்தை அடுத்து நடந்து வரும் அமெரிக்க நிலைமை குறித்து கருத்து தெரிவித்தார்.
தானும், தனது மனைவி Michelle Obamaவும், George Floyd குடும்பத்தினரான Breonna Taylor, Ahmaud Arbery மற்றும் ஏனைய குடும்பத்தினருடன் இணைந்து தூக்கத்தை பகிர்ந்து கொள்வதாக கூறி Obama தனது உரையை தொடங்கினார்.
Obama கூறுகையில் “அவர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் நினைவாக ஒரு நியாயமான, நீதியான தேசத்தை உருவாக்க போராட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.
மேலும், சமீபத்திய நாட்களில் பல இளைஞர்கள் இணைந்து செயல்படுவதை காணும்போது, தான் தளராத நம்பிக்கையுடன் இருப்பதாக உணர்வதாகவும், வரலாற்று ரீதியாக இந்த இளைஞர்கள் “முன்னேற்றத்திற்கான விணை ஊக்கியாக” இருப்பதாகவும் ஒபாமா கூறியுள்ளார்.
மேலும், “இந்த நாடு சிறப்பாக வரப்போகின்றது என்று எனக்குத் தோன்றுகிறது” என்றும் ஒபாமா கூறினார்.