76 அகவையுடைய Lorenzo Sanz 1995 முதல் 2000 வரை Real Madrid இன் தலைவராக இருந்துவந்துள்ளார். அந்த நேரத்தில், Real Madrid விளையாட்டு கழகம் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது.
ஏற்கனவே அவருக்கு நீருழிவு நோய் இருந்ததாகவும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் பின் சிறுநீரகத்திலும் நோய் ஏற்பட்டதாகவும் அவருடை மகன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்று ஏற்பட்டதிற்கு பிற்பாடு கடுமையான காச்சலும் சுவாசப்பிரச்சனையும் ஏற்பட்டு இருந்தன் பிற்பாடு சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சனிக்கிழமை இறந்துள்ளதாக ஸ்பானியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கழகத்தின் தலைவராகுவதற்கு முன்பு அவர் 1995 இலும் 2000 ம் ஆண்டிலும் கழகத்தின் இயக்குனராக இருந்துவந்துள்ளார். 2000 ஆம் ஆண்டில், நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் புளோரண்டினோடு போட்டியிட்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தலைவர் பதவியை இழந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.