“Smittestopp” செயலியின் அனைத்து தரவு சேகரிப்பையும் நிறுத்துகின்றது FHI!

  • Post author:
You are currently viewing “Smittestopp” செயலியின் அனைத்து தரவு சேகரிப்பையும் நிறுத்துகின்றது FHI!

தரவு ஆய்வாளரிடமிருந்து தடை அறிவிக்கப்பட்ட பின்னர், “Smittestopp” செயலியிலிருந்து எல்லா தரவுகளையும் FHI நீக்குகின்றது என்றும் மேலும், மறு அறிவித்தல் வரும்வரை தரவு சேகரிப்பும் நிறுத்தப்படும் என்றும் FHI அறிவித்துள்ளது.

இந்த செயலியை உருவாக்குவதற்கும், சோதனை செய்வதற்கும் நாங்கள் கூடுதலான நேரத்தை இழந்திருப்பதால், இது ஒரு பின்னடைவுக்கு வழிவகுக்கும், மேலும் நோர்வேயில் தொற்று பரவுவதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் பாதிக்கும் என்று இயக்குனர் ‘Camilla Stoltenberg‘ கூறியுள்ளார்.

Smittestopp செயலியில் தனிப்பட்ட தரவுகளை சேகரிப்பதற்கான தற்காலிக தடை குறித்த முடிவை, கடந்த வெள்ளி அன்று பொது சுகாதார நிறுவனம் பெற்றது.

தற்போதைய சூழ்நிலையில், செயலியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்வுகள் மற்றும் நோர்வேயில் தொற்று நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில், இந்த செயலி தனியுரிமையில் பெரிதாக பாதிப்பு செலுத்தவில்லை என்று நோர்வே தரவு ஆய்வாளர்கள் நம்புகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: FHI

பகிர்ந்துகொள்ள