“TikTok” பரிதாபம்! உயிரை இழக்கும் 12 வயது சிறுவன்!!

You are currently viewing “TikTok” பரிதாபம்! உயிரை இழக்கும் 12 வயது சிறுவன்!!

“TikTok” செயலியில் கொடுக்கப்பட்ட சவாலொன்றை நிறைவேற்றி வெற்றிக்காண முயன்ற 12 வயதான பிரித்தானிய சிறுவனொருவன் உயிரை இழக்கும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த 12 வயதான “Archie” என்ற சிறுவன், “TikTok” செயலியினால் ஈர்க்கப்பட்டிருந்த நிலையில், அச்செயலியில் கொடுக்கப்பட்ட சவாலொன்றை நிறைவேற்றி வெற்றியடைய முயன்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், வைத்தியர்களின் முடிவின்படி குறித்த சிறுவன் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூளைச்சாவடைந்த நிலையிலும், பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 07.04.22 முதல் செயற்கை முறையில் உயிர்வாழ வைக்கப்பட்ட குறித்த சிறுவன், இனிமேல் மீண்டு வரமாட்டான் என வைத்தியர்கள் முடிவு செய்திருப்பதால் அவனை செயற்கையாக உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கும் இயந்திரத்தை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. எனினும், எப்போதாவது தமது மகன் உயர் பெற்று கண்விழிப்பானென்ற நம்பிக்கையில் சிறுவனின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடியபோது நீதிமன்றமும் வைத்தியர்களின் முடிவையே தீர்ப்பாக வழங்கியிருந்தது. எனினும் தளராத பெற்றோர் சர்வதேச மனிதவுரிமைகளுக்கான நீதிமன்றத்தையும் நாடியிருந்த போதிலும், பிரித்தானிய நீதித்துறையின் முடிவுகளில் தலையிட விரும்பவில்லையென்ற காரணத்தை கூறி, பெற்றோரின் வேண்டுகோளை சர்வதேச மனிதவுரிமைகள் நீதிமன்றமும் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த சிறுவனை ஜப்பான் அல்லது இத்தாலிக்கு கொண்டு சென்று அங்கு வைத்தியம் செய்வதற்கு சிறுவனின் பெற்றோருக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டபோதும், சிறுவனை பிரித்தானியாவுக்கு வெளியே கொண்டு செல்வதற்கு பிரித்தானிய அதிகார மையம் மறுத்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி மேம்பாடு: 07.08.2022

“Archie” என்ற 12 வயது சிறுவனை செயற்கையாக உயிரோடு வைத்திருந்த இயந்திரம் நிறுத்தப்பட்டதால் அவனது உயிர் பிரிந்துள்ளதாக அவனது குடும்பத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply