கொரோனா தொற்றுநோய் செப்டம்பர் 11 பயங்கரவாதம் மற்றும் Pearl Harbour மீதான தாக்குதல் இரண்டையும் விட மிகவும் மோசமான நெருக்கடியை தந்துள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
1941 இல் Hawaii இலுள்ள Pearl Harbor மீது ஜப்பான் நடத்திய தாக்குதல் அமெரிக்காவை இரண்டாம் உலகப் போருக்குள் கொண்டுவந்தது. 2001 ஆம் ஆண்டில், செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.
கொரோனா, Pearl Harbor தாக்குதலை விட மோசமானது. இது World Trade Center தாக்குதலை விட மோசமானது. கொரோனா பாதிப்பு ஒருபோதும் இந்த அளவிற்கு நடந்திருக்கக்கூடாது என்று டிரம்ப் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய் காரணமாக இதுவரை 74,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.