VEITVET பாடசாலையில், 10 ம் வகுப்பு மாணவர்களில் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்ட பின்னர், 10 ஆம் வகுப்பில் மொத்தம் 18 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் அதிபராக செயல்பட்டு வரும் ‘Katrin Meløy‘ கூறுகையில், முதலில் இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகவும், இரண்டு நாட்களுக்குப் பின்னர், மே 29 வெள்ளிக்கிழமை அன்று, குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
பாதிக்கப்படட சிறுவர்கள் முறையே 7 மற்றும் 10 ஆம் நிலைகளைச் சேர்ந்த சகோதரர்கள் ஆவர். 7 ஆம் வகுப்பு மாணவன் சிறிது காலமாக பள்ளிக்கு வரவில்லை என்றும் எனவே, இந்த வகுப்பில் உள்ள மாணவர்களை தனிமைப்படுத்தப்படுவது அவசியமில்லை என்றும் மாவட்ட கண்காணிப்பாளர் முடிவு செய்துள்ளார் என்று Meløy மேலும் கூறியுள்ளார்.
இந்த வாரம் புதன்கிழமை குறித்த மாணவர்களின் தாய்க்கு கோவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பத்தாம் வகுப்பு குறிப்பிட்ட மாணவனின் குழுவினர் மற்றும் சக மாணவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டுப் பள்ளியையே கொண்டிருந்தனர் என்றும் குறித்த சகோதரர்கள், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜூன் 5 வெள்ளிக்கிழமை வரை தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்: VG