ஆப்பிரிக்காவில், தொற்றை கட்டுப்படுத்தாவிட்டால் 190,000 வரை கோவிட் -19 நோயால் இறக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படாவிட்டால், முதல் ஆண்டில் 29 முதல் 44 மில்லியன் மக்கள் வரை நோய்த்தொற்றால் பாதிக்கப்படலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த மதிப்பீடுகள் 47 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.