ZOOM- காணொளி அழைப்பு மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டது!

  • Post author:
You are currently viewing ZOOM- காணொளி அழைப்பு மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டது!

சிங்கப்பூரில், நபர் ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தலில் பங்கு வகித்ததற்காக “ZOOM” என்ற காணொளி அழைப்பு மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவே நகரத்தில் முதன் முதலாக ஒரு வழக்கில் தொலைவிலிருந்து வழங்கப்பட்ட மரணதண்டனை அறிவிப்பாகும் என்று Reuters தெரிவித்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த 37 வயதான புனிதன் ஜெனசன் (Punithan Genasan) என்பவரே 2011 ம் ஆண்டு Heroin பரிவர்த்தனையில் பங்கு கொண்டதற்காக திங்கள் அன்று தண்டனை பெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஜெனசனின் பாதுகாப்பு வழக்கறிஞர் Peter Fernando ஜெனசனுக்கு ZOOM அழைப்பு மூலம் மரண தண்டனை வழங்கப்பட்டதை உறுதி செய்துள்ளதுடன், மேல்முறையீடு செய்வதை கருத்தில் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மரண தண்டனை வழக்குகளில் ZOOM மாநாடுகளைப் பயன்படுத்துவதை உரிமைக் குழுக்கள் விமர்சித்துள்ள நிலையில், Peter Fernando வெள்ளிக்கிழமை உரையாடலில் இதனை தான் எதிர்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள