அசாதாரண நாக்கு வீக்கம்; “கொரோனா” பக்கவிளைவு!

You are currently viewing அசாதாரண நாக்கு வீக்கம்; “கொரோனா” பக்கவிளைவு!

“கொரோனா” வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு அசாதாரண நாக்கு வீக்கம் (அழற்சி) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில், “கொரோனா” வைரஸால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அசாதாரணமான நாக்கு வீக்கம் ஏற்பட்டுள்ளதை தான் அறிந்துள்ளதாக, அமெரிக்க வைத்தியநிபுணரான “James Melville” தெரிவித்துள்ளார். இந்த வைத்தியரின் தகவல்களின்படி, அவரது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட, “கொரோனா” வைரஸால் பீடிக்கப்பட்ட 9 நோயாளிகளில் அனைவரும் உயிர்காக்கும் இயந்திரம் மூலம் காப்பாற்றப்பட்டவர்கள் எனவும், இவர்களில் சிலருக்கு அசாதாரணமான நாக்கு வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவருக்கு பக்கவாதம் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அசாதாரண நாக்கு வீக்கம் காரணமாக, நோயாளிகள் உணவு உண்ண முடியாமலும், பேச முடியாமலும் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீர் நிறைந்த “பலூன்” போல காணப்படும் வீக்கமடைந்து நாக்கு மிகுந்த வலியை கொடுக்குமெனவும், வாய்க்கு வெளியே அதிக நேரம் இருந்தால் வீங்கிய நாக்கு உலர்ந்துவிடுவதால் அதில் வெடிப்புகள் ஏற்படுமென்றும், அதனால் நாக்கு உலர்ந்து விடாமல் பாதுகாப்பது சிக்கலாக இருப்பதாகவும், இவ்வாறு நாக்கு வீக்கம் ஏற்பட்டுள்ளவர்கள் மனதளவில் சோர்ந்து போயுள்ளதாகவும் வைத்திய நிபுணரான “James Melville” மேலும் தெரிவிக்கிறார்.

அசாதாரண நாக்கு வீக்கம்;

சென்றவருட இறுதிப்பகுதியில் அமெரிக்காவில் “கொரோனா” தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரது நாக்கு கொஞ்சம் கொஞ்சமாக வீங்கத்தொடங்கி, அசாதாரண நிலையில் வீக்கமடைந்ததை தொடர்ந்து வேறும் சிலருக்கு நாக்கு வீக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எனினும், “கொரோனா” வைரஸுக்கும் மேற்படி அசாதாரணமான நாக்கு வீக்கத்துக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாக குறிப்பிடும் வைத்தியர்கள், இதுகுறித்த ஆய்வுகள் மிகக்கடினமானதாக இருக்குமெனவும் தெரிவிக்கின்றனர்.

https://www.tv2.no/nyheter/14020288/

பகிர்ந்துகொள்ள

Leave a Reply