இந்தியாவில் கொரோனா ; புதிதாக, கிட்டத்தட்ட 10,000 பேருக்கு நோய்த்தொற்று!

இந்தியாவில் கொரோனா ; புதிதாக, கிட்டத்தட்ட 10,000 பேருக்கு நோய்த்தொற்று!

இந்தியாவில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது, கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10,000 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மத தளங்களை அதிகாரிகள் மீண்டும் திறப்பதே புதிய தொற்றுநோய்களின் அதிகரிப்புக்கு காரணம் என்று நம்பப்படுகின்றது.

மராட்டியத்தில் ஒரே நாளில் 149 பேர் உயிரிழப்பு:
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தொற்று நோய் அசுர வேகத்தில் பரவி வருகின்றது.

மாநிலத்தில் இந்த மாதம் முதல் 8 நாளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு ஒரேநாளில் 149 பேர் பலியானார்கள். இதுவரை மராட்டியத்தில் வைரஸ் நோய்க்கு 3 ஆயிரத்து 438 பேர் உயிரிழந்து உள்ளனர். 44 ஆயிரத்து 517 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 1879 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

டெல்லியில் புதிதாக 1,501 பேருக்கு கொரோனா தொற்று:

டெல்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,501 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கு புதிதாக 1,501 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 32,810 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,245 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 984 பேர் பலியாகியுள்ளனர்.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments