கரைச்சி பிரதேச சபையினால் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பணப்பாட்டு விழா!காணொளி

You are currently viewing கரைச்சி பிரதேச சபையினால் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பணப்பாட்டு விழா!காணொளி

கரைச்சி பிரதேச சபையின் பண்பாட்டு விழா தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பண்பாட்டு விழா – தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி குற்றச் சாட்டு

கரைச்சி பிரதேச சபையினால் இன்று நடாத்தப்படுகின்ற பணப்பாட்டு விழா என்பது முற்றிலும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பணப்பாட்டு விழாவா காணப்படுகிறது. தமிழ்த் தேசிய உணர்வை அடுத்த சந்தததியினருக்கு கடந்து விடாது மடைமாற்றி நடாத்துகின்றார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகா அவர்கள் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிபல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளும் தரப்பினரால் பெருமெடுப்பில் விளம்பரப்படுத்தளோடு இன்று (10) நடாத்தப்படுகின்ற பண்பாட்டு பெருவிழா இந்த சூழலில் எமது மக்களுக்கு தேவையா இல்லையா என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தவே இவ்வுவூடகச் சந்திப்பை மேற்கொண்டுள்ளோம்.

இன்று தமிழ் மக்களை பொறுத்தவரை மிக முக்கிய நாள் ஆதாவது பெண்கள் எழுச்சி நாள் . 1987,88 ஆம் ஆண்டுகளில் இருந்து விடுலை உணர்வோடு இந்த பெண்கள் எழுச்சி நாளை கொண்டாடி வருகின்றோம். கடந்த வருடமும் இந்த நாளை
கொண்டாடியுள்ளோம், இந்தவருடமும் யாழ்ப்பாணத்தில் எங்களுடைய கட்சியினர் இந்நாளை கொண்டாடுகின்றனர்.

1987 ஆம் ஆண்டு இதேநாள் மாலதி அக்கா சாவடைந்திருந்தார் இந்த மண்ணிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்ற நோக்கில் அந்த மரணம் நிகழ்ந்திருந்தது. ஆனால் இன்றைய நாளை கரைச்சி பிரதேசசபையும் அதனை நடாத்துகின்ற கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரும் இணைந்து இந்த நாளை
வெறும் ஒரு பணப்பாட்டு நாளாக தமிழ்த்தேசிய உணர்வுகளை எமது அடுத்த சந்தததியினருக்கு கடத்தவிடாது தடுத்து மடைமாற்றி நடாத்துகின்றார்கள். அந்த ஈகைத்தையும், தியாகத்தையும் இதன் மறைத்து பண்பாட்டு விழாவாக
மாற்றியிருக்கின்றார்கள். மாலதி அக்கா எந்த அந்நியநாட்டு
இராணுவனத்தினருக்கு எதிராக மரணித்திருந்தாரோ அந்த நாட்டின்
யாழ்ப்பாணத்தில் உள்ள தூதுவரை அழைத்து செங்கம்பள விரித்து மாலை அணிவித்து
மகிழ்ந்து,புகழ்ந்து பாடி வரவேற்கின்ற நிகழ்வும் கிளிநொச்சியில்
நடைபெறுகிறது.

எனவே இந்த நிகழ்வான முற்றிலுமாக அவருடைய தியாகத்தையும்,மரணத்தையும்
கொச்சைப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாக இன்றைய பண்பாட்டு விழா நடைபெறுகிறது.
ஆகவே தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி இதனை வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தேசியத்தை அடுத்த
தலைமுறையினருக்கு கடத்துவதனை தடுக்கும் வகையில் பல நிகழ்வுகளை
நடாத்திவருகின்றார்கள் நாங்களும் அவர்கள் திருந்துவார்கள் என பல தடவைகள்
அமைதியாக இருந்துவிட்டோம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள்
முன்ணணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன்.

ஜெனீவா அமர்வு நிறைவுற்ற நிலையில் இந்திய தூதுவரை அழைத்து விழா எடுப்பது
என்பது தமிழ் மக்களுக்கு இங்கு எந்த பிரச்சினையும் இல்லை அவர்கள் 13 ஜ
ஏற்றுக்கொள்கின்றார்கள் என்ற செய்தியை சர்வதேசத்திற்கு வழங்கவே இந்த விழா
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இச் சந்திப்பில் கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள்
முன்ணணியின் உறுப்பினர்கள் புவனேஸ்வரன்,ஜென்சன் ஆகியோரும்
கலந்துகொண்டனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments